மேலும் 4 இலட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை – வெளியான அறிவிப்பு.!

0
537

அடுத்த மாதம் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை வழங்கப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த உதவித் தொகை திட்டத்திற்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, அஸ்வெசும கொடுப்பனவை பெறும் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை தற்போது 1.38 மில்லியன் ஆகும் என தெரிவிக்கப்படுகின்றது.

அஸ்வெசும இணையத்தள கணக்கில் எப்படி நம்முடைய அஸ்வெசும கொடுப்பனவு வரவு வைக்கப்பட்டதை பார்க்க முடியும்.

முதலாவதாக உங்களுடைய தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது QR ல் இருக்கும் HH இலக்கம் உங்களிடம் இருப்பது கட்டாயம். அதை உள்ளிட்டு நீங்கள் உங்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதை பார்க்கலாம்.

பணம் வைப்பில் இடப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட கீழே தரப்பட்டுள்ளது இணையத்தளத்திற்கு செல்லவும். (லிங் கீழே உள்ளது)..

https://iwms.wbb.gov.lk/household/search

உதாரணமாக (Selected Category – Poor) என இருந்தால் உங்கள் கணக்கில் 10,000/- வைப்பு செய்யப்பட்டு இருப்பதை காணமுடியும்

அஸ்வெசும கொடுப்பனவுக்கு இதுவரைக்கும் தெரிவானவர்களின் பெயர்ப் பட்டியலை எப்படி பார்க்க வேண்டும்..?

முதலாவதாக அஸ்வெசும பெயர்ப் பட்டியல் இணையத்தளத்திற்கு சென்றவுடன் உங்களுக்கு 5 விதமான கேள்விகள் கேட்கப்படும் அதனை நீங்கள் சரியாக தெரிவு செய்ய வேண்டும்.

Province, District, Divisional Secretariat Division, GN Division போன்றவற்றை சரியாக கொடுக்க வேண்டும்.

பின்னர் View Registry என்பதை கொடுங்கள்.

கிலிக் செய்தவுடன் உங்களுடைய கிராம அலுவலர் பிரிவில் அஸ்வெசும கொடுப்பனவுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலை பார்வையிட முடியும்.

பெயர்ப் பட்டியலை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிலிக் செய்யவும்.

https://iwms.wbb.gov.lk/household/list