புத்தாண்டு கொண்டாட்டத்தில் கார் புகுந்து 10 பேர் பலி..! Video

0
301

உலகம் முழுவதும் நேற்று நள்ளிரவு புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்துக்குள் கார் புகுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.

அதன்படி போர்பான் தெருவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மக்கள் கூடியிருந்தபோது திடீரென கார் புகுந்தது. கார் புகுந்து அடுத்தடுத்து மோதியதில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகத் தெரிகிறது. மக்கள் மீது காரை ஏற்றிய ஓட்டுநரை, நியூ ஆர்லியன்ஸ் போலீசார் துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.