மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்ப்பு.!

0
422

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் கடற்கரையிலிருந்து இன்றையதினம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து அந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 40 வயது மதிக்கத்தக்கப் பெண் என களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதுவரையில் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் சடலத்தை அடையாளம் காண்பதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.