யாழில் ஆசிரியைகளின் படத்தை AI மூலம் ஆபாசமாக எடிட் செய்த மாணவர்கள்.!

0
2

யாழ்.வடமராட்சி பகுதியில் பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியைகளின் புகைப்படங்களை அதே பாடசாலையில் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் AI மூலம் ஆபாசமாக எடிட்டிங் செய்து வட்சப் குரூப்பில் பரப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

அதே பாடசாலை மாணவிகளின் சில புகைப்படங்களையும் ஆபாசமாக AI மூலம் எடிட் செய்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆசிரியர்கள் அனைவரும் கற்றல் நடவடிக்கையை புறக்கணித்து பாடசாலையில் ஒன்றுகூடிய நிலையில் சம்பவம் தொடர்பாக பாடசாலையின் அதிபர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

அந்த முறைப்பாட்டுக்கு அமைய, முதற்கட்டமாக 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 17 வயதுடைய குறித்த 3 மாணவர்களும் செவ்வாய்க்கிழமை (28) இன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது வழக்கை விசாரித்த நீதவான, மாணவர்களை புதன்கிழமை (29) வரை அச்சுவேலி பகுதியில் உள்ள ‘சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில்’ (தடுப்புக்காவல் இல்லம்) தடுத்து வைக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 3 சந்தேக நபர்களையும் கைது செய்ய வேண்டியுள்ளதாகப் பொலிஸார் நீதவானின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.