யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி ஒருவர், டிக்-டொக் செயலி மூலம் அறிமுகமான கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பெற்றோரின் புகாரையடுத்து இளவாலை பொலிஸார் அந்த ஜோடியை மீட்டு விசாரணை நடத்தினர்.
இதன்போது, சட்ட நடைமுறைகளின்படி சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவர் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இது பொலிஸார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிறுமியிடம் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில், தற்போதைய காதலனுடன் செல்வதற்கு முன்னதாக, மாதகல் பகுதியைச் சேர்ந்த தனது முன்னாள் காதலன் ஒருவனால் தான் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து, முன்னாள் மற்றும் தற்போதைய காதலர்கள் இருவரையும் இளவாலை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டால் இளைய சமூகம் சீரழிந்து வருவது குறித்துச் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன், பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.










