உழவு இயந்திர விபத்தில் சாரதி உயிரிழப்பு.!

0
12

உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்த விபத்தில், அதன் சாரதி காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

மடுல்சீமை – பசறை வீதியில் மாளிகாதென்ன நோக்கிச் செல்லும் கிளை வீதியின் சரிவான பகுதியொன்றில் நேற்று (16) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விறகு ஏற்றுவதற்காக சென்ற குறித்த உழவு இயந்திரம் ஒரு இடத்தில் இருந்த விறகை ஏற்றிக் கொண்டு மேலும் ஒரு இடத்தில் உள்ள விறகை ஏற்றுவதற்காக மேலும் விறகுகள் இருக்கும் இடத்திற்கு உதவியாளர்கள் சென்ற போது உழவு இயந்தி சாரதி அவ்விடத்திற்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளையிலேயே உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும் இதனால் காயமடைந்த சாரதி பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் பசறையில் இருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த விபத்துக்கான காரணம் உழவு இயந்திரம் பிரேக் செயல்படாமையே என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர் 43 வயதுடைய வெரல்லபதன, மடுல்சீமை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.