யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் 27 வயது இளைஞன் கைது.!

0
192

இன்றையதினம் (10) யாழ்ப்பாணம், ஐந்து சந்திப் பகுதியில் 3,000 போதை மாத்திரைகளுடன் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி சுமார் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைத் தடுப்புப் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.