நுவரெலியா கிரெகரி ஏரியில் நீர்விமானம் விபத்து – 2 விமானிகள் காயம்.! Video

0
61

நுவரெலியா, கிரெகரி ஏரியில் நீர் விமானம் (sea flight) ஒன்று இன்று (07) பிற்பகல் 12.30 மணியளவில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் அதிலிருந்த 2 விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்வதற்காக வந்தபோதே விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளையும், ஏரியில் படகு சவாரி செய்துகொண்டிருந்தவர்கள் மீட்டுள்ளனர்.