18 மாடி கட்டிடம் ஒன்றிலிருந்து சடலம் மீட்பு.!

0
163

அம்பலங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலகம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 18 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றின் 15 ஆவது மாடியில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் உள்ளதாக அம்பலங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், நேற்று (02) பிற்பகல் வேளையில் இது குறித்து தெரியவந்துள்ளது.

சடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அம்பலங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.