“நாடே ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் குறித்த நாளாந்த அறிக்கையை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, நேற்று (22) முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது 1,025 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 22 பேர் தடுப்பு காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
கைதானவர்களில் 20 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.










