ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லொறி மோதியதில் 21 வயது இளைஞன் உட்பட இருவர் உயிரிழப்பு.! Video

0
8

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லொறி மோதியதில் 21 வயது இளைஞன் உட்பட இருவர் உயிரிழப்பு.!

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் திம்புள்ள பத்தனை சந்தி பகுதியில் இன்று (20) காலை 7.00 மணியளவில் இடம்பெற்ற லாரி விபத்தில் லிந்துலை கௌலஹேனா பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

டயகமவிலிருந்து கண்டி நோக்கி இன்று காலை பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, தேனீர் குடிப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த வேளையில், பேருந்தின் பின்புற கதவிலிருந்து பிரதான வீதிக்கு இறங்கிய இரு பயணிகள், நாத்தண்டியாவிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற லாரியுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் லிந்துலை கௌலஹேனா பகுதியை சேர்ந்த 21 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மற்றொரு பயணி படுகாயமடைந்த நிலையில் முதலில் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

விபத்துடன் தொடர்புடைய லாரி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Video – https://www.facebook.com/share/v/17biHf7x5v/