சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் 5 பேர் கைது..!

0
4

வீடான்றில் ஐஸ் ரக போதைப்பொருளுடன் தங்கியிருந்த 5 பேரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையாடி கிராமம் 01 பகுதியிலேயே இந்த கைது நேற்று (19) இடம்பெற்றுள்ளது.

குறித்த நடவடிக்கையின் போது 2,055 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேகநபர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள், கைத்தொலைபேசிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.