முல்லைத்தீவு – சாலை பகுதியில் இருந்து கடத்தமுற்பட்ட ஒருதொகுதி கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது, சாரதி தப்பிஓடியுள்ளார்.
17.12.2025 இன்று காலை முல்லைத்தீவு – சாலை கடற்கரை பகுதியில் கடல் வழியாக கடத்திவரப்பட்ட கேரளா கஞ்சா தரைவழிபாதை ஊடாக கடத்தப்படுவதாக கடற்படையினர் மற்றம் சிறப்பு அதிரடிப்படையினர்,பொலீசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த கடத்தல் நடவடிக்கை முறிகடிக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்ட கஞ்சாவும் வாகனமும் மீட்கப்பட்டுள்ளதுடன் வாகனத்தின் சாரதி தப்பி ஒடியுள்ளார்.
சாலைப்பகுதியில் உள்ள கடற்படையினரின் தகவலுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது 140 கிலோ கேரளா கஞ்சாவும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வாகனம் யாழ்பாபணம் – கிளாலி பகுதியினை சேர்ந்தவருடையது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.












