23 பேருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து.! Video

0
13

மொனராகலை பகுதியில் பெய்து வரும் அடைமழை காரணமாக கும்புக்கன் ஓயா நிரம்பி வழிந்ததால், வெல்லவாய – கொழும்பு பிரதான வீதியின் கும்பக்கன் பகுதி நீரில் மூழ்கியுள்ளது.

இதன்போது, 23 பயணிகளுடன் நீரோட்டத்தை கடந்து பயணித்த பேருந்து ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

எனினும், உடனடியாகச் செயற்பட்ட மீட்புக் குழுவினர் பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டதுடன், பேருந்தையும் வெள்ளத்தில் இருந்து மீட்க நடவடிக்கை எடுத்தனர்.