அநுராதபுரம் பிரதேசத்தில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த (05) ஆம் திகதி அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்திலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன்போது குறித்த அதிபருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் எப்பாவல, எதகல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் பின்புறம் புதைத்து வைக்கப்பட்டிருந்த இந்த 1 கிலோ 185 கிராம் ஹெரோயின் தொகை மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கு மேலதிகமாக, குறித்த அதிபரால் அருகிலுள்ள குளமொன்றில் வீசப்பட்டிருந்த, போதைப்பொருளை நிறுப்பதற்குப் பயன்படுத்தப்படும் இலத்திரனியல் தராசு ஒன்றும், பொலித்தீன் சீலர் இயந்திரம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.










