ஏறாவூரில் நடந்த விபத்தில் மருத்துவபீட மாணவன் உயிரிழப்பு.!

0
49

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் வந்தாறுமூலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (24) பதிவாகியுள்ளது.

சந்திவேலி பகுதியிலிருந்து ஏராவூர் நோக்கி பயணித்த டிராக்டர் ரக வானகம் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த இளைஞன் மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிழக்கு பல்கலைக்கழக வைத்தியபீட மாணவன் மஸூத் ஆவர்.

23 வயதுடைய இவர் ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன், மீராவோடையை பிறப்பிடமாகவும் ஓட்டமாவடி மர்க்கஸ் பள்ளிவாயல் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மஸூத் அவர்களின் ஜனாஷா இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.