5 கிலோ கொக்கேய்னுடன் வெளிநாட்டவர் கைது.!

0
7

நாட்டுக்குள் சட்டவிரோதமாக 5 கிலோ கொக்கேய்ன் போதைப்பொருளை கடத்த முயன்ற வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

25 வயதுடைய மலேசிய நாட்டவர் ஒருவரே சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் அபுதாபியிலிருந்து இரவு 8.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இதன்போது, சந்தேகநபர் அவரின் கைப் பையில் சொக்லெட் என பெயரிடப்பட்ட டின்களுக்குள் மறைத்து வைத்திருந்த போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 250 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.