விபத்தில் பெண் உயிரிழப்பு – நால்வர் காயம்.!

0
651

ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் இன்று (21) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தும் முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பெண் ஒருவரும், இரண்டு ஆண்களும் 7 வயதான சிறுவனும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர் முச்சக்கர வண்டியில் பயணித்த 45 வயதான பெண் என தெரிவிக்கப்படுகிறது.

Video – https://www.facebook.com/reel/32896561003291205