கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
கொட்டாஞ்சேனை 16ஆவது லேனில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நபர் ஒருவர் வீதியில் நடந்து செல்கையில் பின்னால் வந்த ஒருவர் இத்துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
அத்தோடு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்ட நபர் தப்பிச் செல்கையில் சுடுபட்டவர் மீது காரையும் ஏற்றியுள்ளார்.
இச் சம்பவத்தின் CCTV காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
அதில் குறிப்பாக, நீண்ட நாட்களாக தொடரும் இரு கும்பல்களுக்கு இடையிலான பகையே இக்கொலைக்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு கொச்சிக்கடை புகுடு கண்ணா – பழனி கும்பல்களுக்கு இடையிலான நீண்டநாள் மோதலே இன்றைய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்னணி என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று கொல்லப்பட்ட 41 வயது நபர் புகுடு கண்ணாவின் முன்னாள் அடியாள் எனப்படுகின்றது.
இந்த இரு கும்பல்களுக்கு இடையிலான மோதலில் ஏற்கனவே பல கொலைகள் பதிவாகியுள்ள நிலையில் இன்றைய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.









