யாழில் சோகத்தை ஏற்படுத்திய தாயின் உயிரிழப்பு..!

0
43

யாழ்ப்பாணம் – வதிரி பகுதியில் திருமணம் செய்து 20 வருடங்களுக்கு பின் ஒரே நேரத்தில் 3 குழந்தைகளை பெற்ற இளம் தாய் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 07 திகதி ஒரே நேரத்தில் 3 பிள்ளைகளை பெற்ற நிலையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

நேற்றைய தினம் (06) மாலை 02:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

3 குழந்தைகளும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தில் யாழ். வதிரி பகுதியைச் சேர்ந்த யோகராஜா மயூரதி (வயது – 46) என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திருமணம் செய்து 20 ஆண்டுகளாக குழந்தை இன்றி பெரும் கஷ்டங்களையும் துன்பங்களையும் எதிர் கொண்டு விட்டு 3 பிள்ளைகளையும் பார்க்காமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.