அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, சிங்கள மற்றும் தமிழ்ப் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்று அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது.









