9 வளைவு பாலத்தைப் பார்வையிட வந்த வௌிநாட்டு பெண் ரயிலில் மோதி உயிரிழப்பு.!

0
3

எல்ல 9 வளைவு பாலத்தைப் பார்வையிட வந்த இந்தியப் பெண் ஒருவர், ரயிலில் மோதி உயிரிழந்த காட்சி வெளியாகியுள்ளது.

இன்று (17) காலை சுமார் 11:05 மணியளவில், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் அவர் மோதியதில், ரயில் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கி காயமடைந்தார்.

இதில், 34 வயதான ஷ்ராவன் லட்சுமி என்ற பெண், தென்மோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக பதுளை மாகாண பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.