வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை..!

0
94

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, அவதானம் செலுத்தப்படும் மட்டத்தில் இருக்கக்கூடும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வெப்பமான வானிலையின் போது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.