Express Pearl கப்பலின் வழக்கு – உயர் நீதிமன்றின் உத்தரவு.!

0
70

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் வழக்குகளில் உத்தரவிடப்பட்ட இழப்பீட்டை செலுத்தத் தவறியதற்காக கப்பலின் வெளிநாட்டு நிறுவனத்திற்கு எதிராக எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கை குறித்து விசாரித்து, எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (25) சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது.

குறித்த அடிப்படை உரிமைகள் மனுக்கள் தொடர்பாக முன்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் செயல்படுத்தப்படும் விதம் குறித்து ஆராய்வதற்காக அந்த மனுக்கள் இன்று அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.