இராணுவ முகாமின் பஸ் சாரதிகள் இருவருக்கு இடையில் தகராறு – ஒருவர் உயிரிழப்பு.!

0
159

தலங்கமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெலவத்தை, பத்தரமுல்லை பகுதியில் உள்ள இராணுவ முகாமில், இராணுவ பஸ் சாரதிகள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கமை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை – புஹுல்வெல்ல பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய இராணுவ பஸ் சாரதி ஒருவரே உயிரிழந்தள்ளார்.

சம்பவத்தன்று, இராணுவ முகாமில் கடமையாற்றும் பஸ் சாரதிகள் இருவருக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறின் போது ஒரு பஸ் சாரதி மற்றைய பஸ் சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்தவர் தலங்கமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபரான 28 வயதுடைய இராணுவ பஸ் சாரதி தலங்கமை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.