சாய்ந்தமருதைச் சேர்ந்த தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
தொழிலதிபர் மீது அவரது வருவாய் உரிமம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்வதைத் தவிர்க்க, பொலிஸ் கான்ஸ்டபிள் லஞ்சம் கேட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் அம்பாறை பிரிவில் உள்ள காரைதீவு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஆவார்.
10,000 ரூபாய் லஞ்சம் கேட்டதற்காக ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளை இலஞ்ச ஒழிப்பு ஆணையம் கைது செய்துள்ளது.