யாழ்ப்பாணம் மருதனார் மடம் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை ஒரு துவிச்சக்கர வண்டியும் , நான்கு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடம் பகுதியில் , வீதியின் மறுபக்கத்திற்கு துவிச்சக்கர வண்டியை திருப்ப முற்பட்டவருடன் மோட்டார் சைக்கிள் வந்தவர் மோதி , நிலைதடுமாறி எதிரே வந்த மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
விபத்தில் அனைவரும் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர்.