அயல் வீட்டுக்காரருடன் தகராறு – 28 வயது இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்.!

0
77

அம்பாறையில் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலைசெய்யப்பட்டுள்ளதாக பெரியநீலாவணை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று இன்று புதன்கிழமை (10) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே கொலைசெய்யப்பட்டுள்ளார். இளைஞனுக்கும் அயல் வீட்டுக்காரனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த இளைஞன் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபரான அயல் வீட்டுக்காரன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.