கல்முனை மாநகர சபை ஊழியர் ஒருவர் விபத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது,
கல்முனை பஸ் சாலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று காலை 6.00 மணிக்கு பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியில், பெரியநீலாவணையில் இருந்து கல்முனை மாநகர சபைக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபரும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் பெரியநீலாவணை சரஸ்வதி வீதியில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான டி. பாஸ்கரன் (56) என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர், கல்முனை மாநகர சபையில் காவலாளியாக பணியாற்றி வருபவர் அவர். சம்பவ தினத்தன்று பெரியநீலாவணையில் அமைந்துள்ள கழிவகற்றல் நிலையத்தில் கடமையாற்றி விட்டு தனது வேலை முடிவுறுத்தல் பணிக்காக கல்முனை மாநகர சபைக்கு செல்லும்போது மருதமுனை பிரதான வீதியில் இந்த விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.