கல்லடியில் நடந்த விபத்து.. பரிதாபமாக உயிரிழந்த 8 மாத குழந்தை.!

0
66

கொழும்பிலிருந்து திரும்பி வரும்போது கல்லடியில் விபத்துக்குள்ளான கார்.. காயமடைந்த 8 மாத கைக் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்..

கடந்த 5 நாட்களின் முன் அதிகாலை வேளையில் மட்டு கல்முனை சாலை வழியே கொழும்பு சென்று திரும்பிக்கொண்டிருந்த ஆரையம்பதியை சேர்ந்த குடும்பம் ஒன்று கல்லடி முருகன் ஆலயத்திற்கு முன் இடம்பெற்ற விபத்தில் சிக்கிங்கொண்ட செய்தியை சேகரித்து பதிவேற்றியிருந்தோம், அந்த விபத்து ஒரு பாரிய விபத்தாக அமைந்திருக்காது என கடந்து சென்றேன்.

பிற்பட்ட நாட்களில் அந்த விபத்து தொடர்பாக மேலதிக தகவல்களை கேட்ட போது மனதுக்கு மிகக் கவலையாக இருந்தது ஒரு கணம் அதிர்ச்சியாக கூட இருந்தது விபத்து நடைபெற்ற சந்தர்ப்பத்தில் காரில் 6 பேர் பயணித்திருந்ததுடன் அதில் 8 மாத கைக் குழந்தை ஒன்றும் அந்த குழந்தையின் 3 வயது சகோதரனும் தாயும் தந்தையும் அம்மம்மா சித்தப்பா என்போர் பயணித்துள்ளனர்.

விபத்து நடைபெறுகின்ற சந்தர்ப்பத்தில் அனைவரும் ஆசனப் பட்டி அணிந்திருந்தனர். கைக்குழந்தையை நித்திரை தூங்கச் செய்வதற்காக தோளில் போட்டு தாலாட்டுகின்ற போது திடீரென விபத்து சம்பவித்ததால் எதிர்பாராத விதமாக குழந்தையின் தலைப்பகுதி காரின் மேல் பகுதியில் அடிபட்டு குழந்தை மயக்கமுறுகிறது, தாயினது இரு கால்களும் உடைந்த நிலையில் தந்தைக்கு கை முறிவு ஏற்படுகிறது.

அந்த குழந்தையின் அம்மம்மாவுக்கும் கால் உடைவு ஏற்பட்ட நிலையில் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த சகோதர இனமான முஸ்லிம் குடும்பம் ஒன்று அவர்களை உடனடியாக மீட்டு அயலவர்களின் உதவியோடு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில்தான் குழந்தையை பரிசோதித்த வைத்தியர்களால் அறிவிக்கப்படுகிறது, குழந்தை மூளைச்சாவடைந்து உள்ளது என்று யார்தான் தாங்கிக் கொள்வார்கள் அந்த செய்தியை. பின் குடும்பத்தார் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சையளித்தபோதும் குழந்தை நேற்று காலை இவ் உலகை விட்டு பிரிந்து சென்று விட்டது என்ற செய்தி அறிவிக்கப்படுகிறது.

குழந்தையின் தாய் இரண்டு கால்களும் உடைந்த நிலையில் 3 மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்ற நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

இறப்புக்களும் இழப்புக்களும் மனித வாழ்வின் நியதிதான் என்றாலும் இவ்வாறான இழப்புக்களை மனம் ஏற்றுக்கொள்ள மறுத்து கடவுள் மீது கோபம் கொள்ளத்தான் செய்கிறது.

இக் குழந்தையின் ஆத்மா இறைவன் கழல் சேரும் இறைவனின் நிழலில் வாழ நாமும் பிரார்த்தனை செய்கிறோம். (கடோ கபு)