மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட இனிய பாரதியின் சகா விடுவிப்பு.!

0
98

சிஐடி யினரால் திங்கட்கிழமை (25) கைது செய்யப்பட்ட இனிய பாரதியின் சகாவான மட்டு களுவங்கேணியைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவரை சுமார் 7 மணித்தியால விசாரணையின் பின்னர் சிஐடியினர் விடுதலை செய்துள்ளதாக கைது செய்யப்பட்டவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இனிய பாரதியின் சகாவாக செயற்பட்டிருந்த குறித்த நபரை சம்பவ தினத்தன்று களுவங்கேணியிலுள்ள அவரது வீட்டில் வைத்து கொழும்பில் இருந்து சென்ற சிஐடி யினர் கைது செய்தனர்.

இதனையடுத்து அவரை கொண்டு சென்று சுமார் 7 மணித்தியால தொடர் விசாரணையின் பின்னர் இரவு 9.00 மணிக்கு விடுவித்துள்ளனர்.