யாழில் ஒரே நேரத்தில் 108 ஜோடிகளுக்கு திருமணம்.!

0
92

சிங்கப்பூர் வாழ் தமிழ் உணர்வாளரது நிதிப் பங்களிப்பில் யாழ். மாவட்டத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலை காரணமாக இல்லற வாழ்வில் இணைய முடியாதிருக்கும் 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடக சந்திப்பொன்றை நடத்தி இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட ரி.ரி. துரை சுமதினியின் பங்களிப்பிலேயே குறித்த 108 தம்பதியினருக்கு திருமணம் செய்துவைக்கப்பவுள்ளது

தாலி, சீதனம் உள்ளிட்ட அனைத்தும் குறித்த தம்பதியினருக்கு வழங்கப்பட்டு தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் எதிர்வரும் வியாழகாகிழமை (28) குறித்த 108 தம்பதியினருக்கும் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.