அழுங்கை வேட்டையாடிய இருவர் கைது.!

0
53

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தெஹிவத்தை பகுதியில் சட்டவிரோத கட்டுத்துவக்கு மற்றும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வேட்டையாடப்பட்ட ஆமடில்லா (அலுங்கு) எனும் மிருகம் ஆகியவற்றுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இவ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சேருநுவர – தெஹிவத்தை பகுதியைச் சேர்ந்த 53, 45 வயதுடைவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று செவ்வாய்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.