சிறைச்சாலை மருத்துவமனையில் இலஞ்சம்; வைத்தியர் கைது.!

0
64

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரானா வைத்தியர் ஹேமந்த ரணசிங்கவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டில், கைதி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற பின்னர், அவர் தொடர்ந்தும் அங்கு தங்கி சிகிச்சைப் பெறுவதற்காக இலஞ்சமாக, 1,500,000 ரூபா கோரப்பட்டதோடு, அதில் 300,000 ரூபா இலஞ்சமாகப் பெறப்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று (13) காலை பிட்டகோட்டேயில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் வைத்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க கைது செய்யப்பட்டார்.