நேற்றிரவு 7 மணியளவில் யாழ்ப்பாணம் கொடிகாமம் ஆசைப் பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில் 4 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் திருகோணமலை அலஸ்தோட்டத்தை பிறப்பிடமாகவும் யாழ் கொடிகாமத்தில் திருமணம் முடித்து வாழ்ந்து வரும் குணரெட்னம் ரோபின்சன் எனும் 36 வயதான குடும்பஸ்தரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது யாழ் கொடிகாமம் வீதியூடாக குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மோட்டார்சைக்கிள் திடீரென பழுதடைந்த நிலையில் வீதியோரமாக மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு பழுதை திருத்திக்கொண்டிருந்த சமயம் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் மோட்டாசைக்கிள் மீது மோதும் நிலை வந்த போது மோதுவதை தடுக்க டிப்பர் சாரதி பிரேக் போட்ட போது பின்னால் வந்துகொண்டிருந்த கூலர் லொறி டிப்பருடன் மோதிய நிலையில் அதன் உந்துதலால் டிப்பர் மீண்டும் மோட்டார்சைக்கிலுடனும் அதனருகில் நின்றுருந்த இளைஞன் மீதும் மோதியுள்ளது பின் கூலர் லொறியானது எதிர் திசையில் வந்த காருடனும் மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த மோட்டார்சைக்கிளை திருத்திக்கொண்டிருந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். இவ் விபத்தில் கார் மற்றும் கார் கூலர்களின் சாரதி உட்பட 4 பேரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் கொடிகாமம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.