அரச ஊழியர் சம்பளத்தை உயர்த்த விசேட திட்டம் – ஜனாதிபதி.!

0
310

அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அதனைப் பாதுகாப்பதற்கு அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 41 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில், பௌதீக வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சிதைந்துபோன அரச சேவையை நவீனமயமாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச சேவையை வலுப்படுத்தும் வகையில், 2027ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக 11 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.