கால்வாயில் விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழப்பு.!

0
107

இசட் டி கால்வாயில் விழுந்து எட்டு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.

பொலன்னறுவை, வெலிகந்த, நாகஸ்தென்ன பகுதியில் ஆடுகளைப் பார்க்கச் சென்ற சிறுவனே இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

இன்று மாலை ஆடுகளைப் பார்க்கப் போவதாக தனது தாயிடம் கூறிவிட்டு, சிறுவன் இவ்வாறு அங்கு சென்றுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.