மட்டக்களப்பில் நபரொருவர் சடலமாக மீட்ப்பு.!

0
143

மட்டக்களப்பு கல்லடி புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் ஞாயிற்று க்கிழமை (03) காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கிரான்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஐயாத்துரை பத்மநாபன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கூலித் தொழிலாளியான குறித்த நபர் சனிக்கிழமை (02) தொழிலுக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில் கல்லடி புனித அந்தோணியார் ஆலயத்திற்கு அருகாமையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

மரணத்திற்கான காரணம் இதுவரை வெளிவராத நிலையில் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.