மசாஜ் நிலைய பணிப்பெண் மீது தாக்குதல் – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது..!

0
130

வாதுவை, தல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையத்திற்கு சென்று பணிப்பெண் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வாதுவை பொலிஸாரால் சனிக்கிழமை (26) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹொரணை பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் குறித்த மசாஜ் நிலையத்திற்கு சென்று, தான் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அங்கிருந்த பணிப்பெண் ஒருவரிடம் கூறியுள்ளார்.

அதற்கு அந்த மசாஜ் நிலைய பணிப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள், மசாஜ் நிலைய பணிப்பெண்ணை பலமாக தாக்கி அங்கிருந்த 27 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த மசாஜ் நிலைய பணிப்பெண் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் வாதுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.