அஸ்வெசும ஜூலை மாத கொடுப்பனவு நாளை முதல் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.!

0
376

அஸ்வெசும முதல் கட்ட நிவாரணத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின், ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை நாளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, அஸ்வெசும முதல் கட்ட பயனாளிகளில் 1,424,548 (14 இலட்சத்து 24 ஆயிரத்து 548) பயனாளி குடும்பங்களுக்கு 11,296,461,250 ரூபாய் (11 ஆயிரத்து 296 மில்லியன் 4 இலட்சத்து 61 ஆயிரத்து 250 ரூபாய்) உதவித் தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பயனாளிகள் ஜூலை 24 முதல் அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியுமென, நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.