அஸ்வெசும பணத்தை மோசடி செய்த பிரதேச செயலக பெண் அதிகாரிக்கு விளக்கமறியல்.!

0
163

அஸ்வெசும பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கொலொன்ன பிரதேச செயலக பெண் அதிகாரி ஒருவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஸ்வெசும பணத்தை மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் சம்பந்தப்பட்ட பிரதேச செயலக அதிகாரி நேற்று (13) பொலிஸ் நிதி குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டார்.

முப்பத்தைந்து இலட்சத்து எண்பதாயிரம் ரூபா அஸ்வெசும பணத்தை மோசடி செய்ததாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.