வவுனியா சம்பவம் – ஆசிரியையின் உடலம் உறவினர்களிடம் கையளிப்பு.!

0
355

கணவனால் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியையான சுவர்ணலதாவின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் முன்னெடுக்கப்படுள்ளது.

வவுனியாவில் கணவனொருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெர்ம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

புளியங்குளம், நொச்சிக்குளம் – அனந்தர்புளியம்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.

நயினாதீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா (32) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

ஆசிரியையின் கணவரே கொலையை செய்துள்ளார். தவறான உறவு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருந்தது, குறித்த ஆசிரியை கர்ப்பமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கணவனை கைது செய்த புளியங்குளம் பொலிஸ், மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். (Photos-FB)