வவுனியாவில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்.. சடலமாக மீட்கப்பட்ட 24 வயது இளைஞன்.!

0
220

வவுனியா – காத்தார்சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிசார் இன்று (04) மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள தற்காலிக வீடொன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேபகுதியை சேர்ந்த செல்லத்துரை கபிநாத் என்ற 24 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சடலத்தில் இரத்தக்கறை படிந்துள்ள நிலையில் குறித்த மரணம் கொலையா..? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த இளைஞர் நேற்று (03) மாலை இளைஞர் குழுவொன்றுடன் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் இன்று காலை அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா குற்றப்பிரிவு பொலிசார், சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இளைஞர்களிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. ஆசிரியையான மனைவியை கொன்று தலையை வெட்டி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்ற கணவன்..!