மற்றுமொரு விபத்தில் 14 வயது மாணவன் உயிரிழப்பு..!

0
252

மற்றுமொரு விபத்தில் 14 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹக்மன, ஹங்கொடகம பிரதேசத்தில் சாரதியினால் கவனயீனமான முறையில் செலுத்தப்பட்ட லொறியொன்று துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் 9 ம் வகுப்பில் கல்வி பயிலும் மெதகொட பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரழந்துள்ளார்.

பெலியத்தவிலிருந்து ஹக்மன நோக்கிச் சென்ற லொறி, கங்கோதகம சந்தியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாணவன் தனது நண்பரின் வீட்டிற்குச் செல்வதற்காக மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.