கணவனின் குடிப்பழக்கத்தால் நேர்ந்த சம்பவம்.. 3 மாணவர்களுடன் தலைமை ஆசிரியை போட்ட ஸ்கெட்ச்..!

0
28

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டம் சவுசாலா வனப்பகுதியில் மே 15ஆம் தேதி பாதி எரிந்த நிலையில், ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில், மீட்கப்பட்டவரின் உடல், 32 வயதாகும் ஆசிரியர் சாந்தனு அரவிந்த் தேஷ்முக் என்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில் ஆசிரியரின் மனைவி நிதி தேஷ்முக் (24) முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில், சினிமா கதையை மிஞ்சும் வகையில் அதிர்ச்சி தகவல்களை தெரியவந்தது. ஆசிரியர் சாந்தனு அரவிந்த் தேஷ்முக்கும், நிதி தேஷ்முக்கும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இதனால் இரு வீட்டாரும் இவர்களின் காதலை ஏற்கவில்லை. இதற்கிடையே, சாந்தனு அரவிந்த் தேஷ்முக் ஆசிரியராக வேலை செய்த பள்ளியில், மனைவி நிதி தேஷ்முக் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

சந்தோஷமாக இருந்த தம்பதி வாழ்க்கையில் குடிப்பழக்கம் தான் எமனாக மாறியது. ஆசிரியர் சாந்தனு அரவிந்த் தேஷ்க் நண்பர்களின் சகவாசத்தால் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். ஒரு கட்டத்தில் தலைமை ஆசிரியையான தனது மனைவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால், தனது கணவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். இதற்காக ஆன்லைனில் தேடிப்பார்த்து மாத்திரைகள் குறித்து தெரிந்து கொண்டார்.

இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி அவர் சத்து மாத்திரைகள் எனக்கூறி மாத்திரையை கணவருக்கு கொடுத்தார். அதை சாப்பிட்ட கணவர் பரிதாபமாக பரிதாபமாக உயிரிழந்தார். தனியாக உடலை எப்படி அப்புறப்படுத்துவது என நினைத்த நிதி தேஷ்முக், தனக்கு உதவி செய்யுமாறு தன்னிடம் டியூசன் படிக்கும் சிறுவர்களிடம் கண்ணீர் மல்க கெஞ்சி கேட்டுள்ளார். இதனால், சிறுவர்கள் 3 பேரும் உடலை அப்புறப்படுத்த உதவி செய்தனர். இதையடுத்து, சிறுவர்கள் உதவியுடன் சவுலாசா வனப்பகுதியில் கணவரின் உடலை வீசினார்.

மேலும், கணவரின் உடல் காவல்துறைக்கு கிடைத்தாலும், அடையாளம் கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக தலைமை ஆசிரியை மறுநாள் இரவு மீண்டும் சிறுவர்களுடன் வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, கணவரின் உடலை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துள்ளார். இவை அனைத்தும் விசாரணையில் தெரியவந்தது. எரியாமல் இருந்த சட்டை துணியை வைத்துதான் இது யார் என அடையாளம் தெரிந்தது. அதை வைத்து தான், அவர் ஆசிரியர் சாந்தனு அரவிந்த் தேஷ்முக் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இந்நிலையில், தலைமை ஆசிரியை, 3 சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.