7 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் 4 பேர் கைது.!

0
29

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 7 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நால்வர் சுங்க அதிகாரிகளால் வியாழக்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதலில், கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 57 வயதான பெண் வியாபாரி ஒருவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் விமான நிலைய கண்காணிப்பு கமராக்கள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், சம்பவத்தில் தொடர்புடைய ஏனைய மூவர் அடையாளம் காணப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள், கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒரு ஆண், அவரது 42 வயதான மனைவி மற்றும் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் ஆவார்.

தாய்லாந்தில் இவ்வகை போதைப்பொருட்கள் திறந்த சந்தையில் எளிதில் கிடைக்கின்ற நிலையில், சந்தேக நபர்கள் இந்தியாவின் பெங்களூரு வழியாக இலங்கைக்கு வந்துள்ளனர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்கள் வைத்திருந்த பயணப்பொதிகளில் 7.150 கிலோ கிராம் ‘குஷ்’ போதைப்பொருள்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்த போதைப்பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.