முல்லைத்தீவில் நடந்த விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு.!

0
82

முல்லைத்தீவு – கர்நாட்டுக்கேணி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு – கொக்கிளாய் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கருநாட்டுகேணி பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 அகவையுடைய மகேஸ்வரன் நர்மதா என்ற பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார்.

பாடசாலை மாணவி வீதிக்கு மறுபக்கத்தில் உள்ள கடை ஒன்றில் பனிஷ் ஒன்றை வாங்கிவிட்டு சென்றபோது, வீதியால் சென்ற கனரக வாகன மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த மாணவி முல்லைத்தீவு மாவட்டம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதியான புத்தளம் பகுதியினை சேர்ந்தவரை கொக்கிளாய் பொலீஸ் கைது செய்துள்ளார்கள்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணையில் பொலீசார் ஈடுபட்டு வருகின்றார்கள்.