யாழில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு.!

0
21

யாழில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்த இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ள சோகச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

ஊரெழு கிழக்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய செல்வராசா அனிஸ்ரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

குறித்த இளைஞனும் அவரது நண்பரும் கடந்த 11ஆம் திகதி யாழில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

வீதியில் சென்ற வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளை பருத்தித்துறை பக்கத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகி காயமடைந்தனர்.

காயமடைந்த நால்வரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூவர் வீடு திரும்பினர். இருப்பினும் குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.