மட்டக்களப்பில் நடந்த விபத்தில் உழவு இயந்திர சாரதி உயிரிழப்பு.! Video

0
362

மட்டக்களப்பு – ஓட்டமாவடி, நாவலடியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாவலடி பிரதேசத்தை அண்மித்த கொழும்பு பிரதான வீதியில் டிப்பர் வண்டி, உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிய வருகின்றது.

உயிரிழந்தவர் மீராவோடையைச்சேர்ந்த மஜீத் ஓடாவியாரின் மகன் பாறுக் (வாழைச்சேனை ஹுசைன் GS, பொலிஸ் உத்தியோகத்தர் சித்தீக் ஆகியோரின் சகோதரர்) எனத்தெரிய வருகின்றது.

விபத்து தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (FB)