வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படாவிட்டால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் – சுமந்திரன்.!

0
22

தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படாவிட்டால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அவர், கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானியை மீளப்பெறுமாறு கோரி ஏற்கனவே ஜனாதிபதிக்குத் தாம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீளப் பெறப்படாவிட்டால் 29ஆம் திகதி பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படாவிட்டால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் – சுமந்திரன்